வாவ்.. தமிழ் பாடல்களை பாடி அசத்தும் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம்பெண்.. க்யூட் வீடியோ வைரல்!

 
ஆப்பிரிக்கா பெண்

உலகில் கோடிக்கணக்கான மக்கள் தமிழ் பேசுகிறார்கள். இந்தியாவில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழியும் தமிழ் தான். இந்நிலையில், ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தமிழ் பாடல்களை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாத்தி படத்தில் இடம்பெற்ற அடியாத்தி பாடலை இளம்பெண் அழகாக பாடியுள்ளார்.


மேலும், சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் வரும் அனல் மேலே பனித்துளி பாடலை பாடி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் . இந்த வீடியோவை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, பிறர் நம் தாய்மொழியை உச்சரிப்பதைக் கேட்கும்போது, ​​வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு. பிற மொழி பேசுபவர்களை நம் தமிழ் மொழியை உச்சரிக்க தூண்டும் திரைக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web