உருக்கமான கடிதம் எழுதி... மகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை!

 
தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பட்டாபிராமில் மன உளைச்சலால் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு மகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி கிரேசி(40). இவர்களது மகள் எப்சிபா (15). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து, மகளுடன் தனியாக வசித்து வந்தார் கிரேசி. எவ்வித வேலைக்கும் செல்லாததால் போதிய வருமானமில்லாமல் மகளின் பள்ளிப்படிப்பை பாதியில் கிரேசி நிறுத்தியுள்ளார்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

அதே நேரத்தில், கிரேசியின் குடும்ப செலவுக்கு அவரது தாயும், அண்ணனும் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை அளித்து வந்துள்ளனர். கணவர் டேவிட்டும் அவ்வப்போது கிரேசிக்கு தொகை அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னையும் தன் மகளையும் கணவர் மற்றும் தாய் வீட்டார் சரிவர கவனிக்க வில்லை. ஆகவே மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறேன் என கிரேசி கடிதம் எழுதி வைத்து விட்டு, தன்னோடு, தனது மகளையும் இணைத்து கட்டுக்கம்பியால் சுற்றிக் கொண்டு மண்ணெணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

தீக்குளித்து தற்கொலை

இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த பட்டாபிராம் போலீஸார், உட்புறமாக பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று, கருகிய நிலையில் கிடந்த கிரேசி, எப்சிபா ஆகிய இருவரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பட்டாபிராம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web