Connect with us

குற்றம்

தோழி இறந்தது தெரியாத யாஷிகா! சீட் பெல்ட் அணியாத சோகம்!

Published

on

கார் விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி இறந்ததை யாஷிகாவிடம் இதுவரை கூறவில்லை என்று யாஷிகாவின் அம்மா சோனல் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த், தன் தோழி பவானி, நண்பர்கள் செய்யது, அமீருடன் பாண்டிச்சேரிக்கு சென்று விட்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை யாஷிகா ஓட்டி வந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் தடுப்புச்சுவரில் மோதி கார் பயங்கர விபத்துக்குள்ளானது.

இதில், சம்பவ இடத்திலேயே பவானி பலியானார்; படுகாயம் அடைந்த யாஷிகா, செய்யது, அமீர் ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரில் 6 ஏர்பேக்குகள் இருந்தும் சீட் பெல்ட் அணியாததால், யாஷிகாவின் தோழி இந்த விபத்தில், காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்பட்டபோது யாஷிகா தனது காரை 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது

“என் மகளுக்கு இப்போது பரவாயில்லை. வலது கால் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்கள். வயிற்றின் முன்பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பவானி இறந்தது யாஷிகாவுக்கு இதுவரையில் தெரியாது. யாஷிகாவின் பிபி அதிகமாக இருப்பதால், அதிர்ச்சியளிக்கும் விஷயம் எதையும் யாஷிகாவிடம் சொல்ல வேண்டாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


பவானி எப்படி இருக்கிறார் என்று அடிக்கடி கேட்டார் யாஷிகா. க்ரிட்டிகலாக இருக்கிறார், வென்டிலேட்டரில் இருக்கிறார். அவரின் அப்பா, அம்மா வந்திருக்கிறார்கள் என்று யாஷிகாவிடம் சொல்லியிருக்கிறேன். யாஷிகா இரண்டு மாதங்கள் கழித்து தான் மெல்ல மெல்ல நடக்க முடியும் என்கிறார்கள் என்று யாஷிகாவின் தாய் சோனல் கூறியுள்ளார்

செய்திகள்7 seconds ago

IPL 2021: புள்ளி பட்டியலில் சிஎஸ்கே முதலிடம்

ஆன்மிகம்10 mins ago

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம்! தரிசன நேரமும் நீட்டிப்பு!!

அரசியல்16 mins ago

மத்திய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இன்று கண்டன போராட்டம்

செய்திகள்32 mins ago

இன்று (செப்டம்பர் 20) பெட்ரோல், டீசல் விலை

ஆன்மிகம்2 hours ago

உஷார்!! தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் கிரிவலம் செல்ல தடை!

ஆன்மிகம்2 hours ago

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்காது…! வீண் அலைச்சல் உண்டாகும்!

ஆன்மிகம்2 hours ago

மிஸ் பண்ணாதீங்க!! புரட்டாசி மாத பௌர்ணமி விரதத்துக்கு இத்தனை பலன்களா??

ஆன்மிகம்2 hours ago

ஏன் பெளர்ணமி பூஜை விசேஷம்?! புரட்டாசி பெளர்ணமியன்று விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?!

gold shop girls saree
செய்திகள்3 hours ago

உஷார்!! தங்கம் வாங்க போறீங்களா? இதைப் படிச்சுட்டு முடிவு பண்ணுங்க!

செய்திகள்12 hours ago

தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பு! நிபுணர்கள் விளக்கம்!

இந்தியா2 weeks ago

15 நாட்கள் முழு ஊரடங்கு! மத்திய அரசு அதிரடி!

அரசியல்4 months ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

செய்திகள்2 months ago

அவசரப்படாதீங்க! ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் அதிரடி மாற்றங்கள்!

அரசியல்5 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்5 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்4 months ago

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

அரசியல்4 months ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

செய்திகள்3 months ago

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

அரசியல்3 weeks ago

பள்ளிகளுக்கு வர கட்டாயமில்லை! தமிழக அரசு!

அரசியல்4 months ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

Trending