குடையோடு கிளம்புங்க... தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகள், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். புறநகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 4ம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!