19 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்... மக்களே உஷார்!

 
மஞ்சள்

  தமிழகத்தில்  வளிமண்டல சுழற்சி உட்பட பல  காரணங்களால்,   19 மாவட்டங்களுக்கு இன்று அக்டோபர் 25ம் தேதி  வெள்ளிக்கிழமை கனமழைக்கான மஞ்சள் 'அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான, 'டானா' புயல், படிப்படியாகவலுவடைந்து, தீவிர புயலாக மாறியுள்ளது. இது, வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா -மேற்கு வங்காளம் இடையே, பூரி - சாகர் தீவுகளுக்கு இடையில், இன்று காலை அதி தீவிர புயலாக கரையை கடந்துள்ளது.

மஞ்சள் அலர்ட்

அதே நேரத்தில்  குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய, வளி மண்டல சுழற்சி அரபிக்கடல் நோக்கி நகர்ந்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய லட்சத்தீவு கடல் பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.  
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 30ம் தேதி  வரை மழை தொடர வாய்ப்புள்ளது. இன்று  நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலுார், அரியலுார், நாமக்கல், கரூர் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், இன்று கனமழைக்கான  'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் மஞ்சள் அலெர்ட்!! மக்களே கவனமா இருங்க!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 2  நாட்களுக்கு, வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும்.  ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசானது அல்லது மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளது. 'டானா' புயல் வலுவடைந்து வருவதால், மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று மணிக்கு 110 முதல், 115 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். மறு அறிவிப்பு வரும் வரை இப்பகுதிகளில்  மீனவர்கள் மீன்பிடிக்க  செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web