பெரும் பரபரப்பு... இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகன் யோஷித ராஜபக்ச கைது!

 
யோசிதா ராஜபக்சே


 
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே இவரின் 2வது மகன், யோஷித ராஜபக்சே. இவர்  அரசாங்கத்திற்கு சொந்தமான காணி மற்றும் சொத்துக்களுடன் தொடர்புடைய பொருளாதார மோசடி வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் சொத்துக் குவிப்பு புகாரில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் யோஷித மீது குற்றப் புலனாய்வுத் துறை  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

 

 ஜனவரி 3 ம் தேதி  குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தொடர்ந்து 2 மணி நேரம்  அவரிடம் விசாரணை நடத்திய போது இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேண்டுமென்றே என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என வாக்குமூலம் அளித்திருந்தார். மேலும், சந்தேகங்கள் தொடர்ந்ததால் இன்று கைது செய்யப்பட்டார்.

 யோஷித ராஜபக்சே


யோஷித ராஜபக்ச கதிர்காமம் பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியை தனிநபர் பயன்பாட்டுக்கு மாற்றி இருப்பதாக  குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனையடுத்து  அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு இப்பொது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் துறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  விரைவில் அவரை  நீதிமன்றத்தில் நிறுத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பதால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web