கோவில்களில் உழவாரப் பணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்!

 
கோவில்களில் உழவாரப் பணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்!


தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்ற பின் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது கோவில் நிலங்கள் மீட்பு, நகைகள் ஆவணப்படுத்துதல், ஆக்கிரமிப்புக்கள் அகற்றம் என பல செயல்பாடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது பாழடைந்துள்ள கோவில்களை மறுசீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளார்.

அது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்து சமய அறநிலைய துறையை நல்ல நிலையில் கொண்டு செல்லவும், சேதமடைந்துள்ள கோவில்களுக்கு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தவும் மற்றும் கோவில்களுக்கு தேவையான பார்க்கிங் வசதிகள், தெப்பக்குளம், நந்தவனம், போன்றவற்றை சீரமைக்கும் பணிகளிலும் அறநிலையத்துறை மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது .

கோவில்களில் உழவாரப் பணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்!


அதன் ஒரு பகுதியாக தற்போது 47 திருக்கோவில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள பக்தர்கள் எளிமையாக கோயில் நிர்வாகத்தை அணுகவும் காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும், இணையதளம் முன்பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பக்தர்கள் உழவார பணி பணி செய்ய இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை
இணையவழி மூலம் பதிவு செய்யும் வசதி www.hrce.tn.gov.in சனி மற்றும் ஞாயிறு
கிழமைகளில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் திருக்கோயில்களில் உழவாரப்பணி செய்ய விருப்பம் உள்ளவர்கள் எளிய முறையில் தங்களுக்கு உகந்த தேதி, நேரம், செய்யும் பணியினைத் தாங்களே தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
https://hrce.tn.gov.inக்குள்

  1. இ சேவைகள் பகுதி
  2. அதில் உழவாரப்பணி
  3. திருக்கோயில் பட்டியலில் விருப்பமான திருக்கோயில்
  4. தங்களுக்கு உகந்த தேதியினை அட்டவணையிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.
    5.நேரம், உழவாரப்பணி மற்றும் முன் பதிவு செய்யப்படாத சீட்டினை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்
  5. பணி செய்ய விரும்புபவர்களின் தகவல்கள் பூர்த்தி செய்யவேண்டும்.
  6. உழவாரப்பணி செய்யும் தேதி நேரம் / மாநிலம், மாவட்டம், பெயர், அடையாள வகை, சான்று எண், பாலினம், வயது’, பழைய கதவு எண்புதிய கதவு எண் /இருப்பிடம், கிராமம் பெயர், மாநகரம் / நகரம் /, அஞ்சல் குறியீடு, மின்னஞ்சல், கைபேசி எண், பணிவகைத் தேர்வு, அங்கீகார மதிப்பு’ , விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்படுகிறேன் என சமர்ப்பிக்க வேண்டும். இதனை செய்து முடித்தவுடன் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு கடவுச்சொல் வரும். அதை உள்ளீடு செய்ய அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மின்னஞ்சலுக்கும் அனுமதிச் சீட்டின் பிரதி ஒன்று அனுப்பப்படும்.
    முன்பதிவு செய்யப்பட்ட உழவாரப் பணியினை உரிய தேதியில் செல்ல இயலாத நிலை ஏற்பட்டால் இ-சேவை பகுதிக்கு சென்று பதிவு செய்தவர்களே அனுமதியினை ரத்துசெய்து கொள்ளவும் முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
From around the web