சென்னை மக்களுக்கு நற்செய்தி... ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்.!

 
ஆட்டோக்கள்


 தமிழகத்தின் தலைநகர் சென்னையில்  பிப்ரவரி 1ம் தேதி  முதல் ஆட்டோ பயணக் கட்டணம் உயர்கிறது என ஒரு தகவல் வெளியானது. அதன்படி, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் தரப்பில் முதல் 2 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாய் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டதாக  கூறப்பட்டது.

ஆட்டோ
இந்நிலையில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக  அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்டணத்தை உயர்த்துவது குறித்த  முடிவுகள் அரசின் பரிசீலனையில் தான் இருந்து வருகிறது.  ஆட்டோ சங்கங்கள் மட்டும் முடிவெடுத்து தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது.

ஆட்டோ

சில ஆட்டோ சங்கங்கள்  பிப்ரவரி 1-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக போக்குவரத்து துறை கவனத்திற்கு வந்ததுள்ளது.   ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுலவர்களிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும்  தமிழ்நாடு போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web