மகளிர் உரிமைத் தொகைக்கு இப்போதும் கூட விண்ணப்பிக்கலாம்... உடனே முந்துங்க... புதிய வழிமுறை அறிவிப்பு!

 
மகளிர் உரிமைத் தொகை

மகளிரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மீதான மக்களின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

2023 செப்டம்பர் 15ம் தேதி தொடங்கிய இந்தத் திட்டத்தின் கீழ், ஏழை மற்றும் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 1.15 கோடி பெண்கள் இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர்.

2027ல் இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்புடன்  மக்கள் தொகை கணக்கெடுப்பு!  

அதேசமயம், உரிமைத்தொகை பெறாமல் விட்டுச் சென்ற தகுதியான பெண்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வருவதுடன், தற்போது அந்த விண்ணப்பங்கள் கிராம வாரியாக அதிகாரிகள் மூலம் நேரடியாக சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

புதிய பயனாளிகளுக்கு வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் ரூ.1,000 உரிமைத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்பே அறிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை

இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பெண்கள் தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் நவம்பர் 14ம் தேதிக்குள் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். முகாம் உங்கள் மாவட்டத்தில் முடிந்திருந்தால், கவலைப்படத் தேவையில்லை. மாற்று வழியாக வாரந்தோறும் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் முகாமில் நேரடியாக மனு அளித்து சேர்க்கை கோரலாம்.

இந்த முயற்சியை தவறவிடாமல், தகுதியான அனைத்து பெண்களும் உடனடியாக விண்ணப்பித்து மாதந்தோறும் ரூ.1,000 பெறுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?