காதல் தகராறில் குளத்தில் குதித்த இளைஞர் உயிரிழப்பு ... காதலி சிகிச்சையில்!

 
இன்ஸ்டா

திருவாரூர் அருகே மருதப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (23) பிபிஏ படித்த இளைஞர். கும்பகோணம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ (19) உடன் இன்ஸ்டாகிராம் வழியாக அறிமுகமான அவர், பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஜெயஸ்ரீ காதலை முடிக்க விரும்பியதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டா காதல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரவீன், நேரில் பேசி முடிவு செய்யலாம் என கூறி, நேற்று ஜெயஸ்ரீயை பைக்கில் அழைத்து திருவாரூர் நோக்கி சென்றார். வழியில் திருக்கண்ணமங்கை அருகே சேட்டாக்குளம் பகுதியில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஜெயஸ்ரீ தனது முடிவில் உறுதியுடன் இருந்ததால் மனமுடைந்த பிரவீன் திடீரென குளத்தில் குதித்தார். அவரை காப்பாற்ற முயன்ற ஜெயஸ்ரீயும் குளத்தில் குதித்தார்.

ஆம்புலன்ஸ்

அங்கு இருந்த மக்கள் இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் பிரவீன் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெயஸ்ரீ தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து குடவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!