அட கொடுமையே... தண்டவாளத்தில் குடை விரித்து இளைஞர் செஞ்ச வேலை... அதிர்ச்சியில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்
“நீங்க எல்லாம் எங்கேயிருந்து டா வர்றீங்க...” என்று சமூக வலைத்தளங்களில் இந்த காட்சியை ட்ரோல் செய்து வருகின்றனர். தண்டவாளத்தில் தலை வைத்து, முகத்தில் வெயில் படாமலிருக்க குடையை விரித்து ஆனந்தமாக எந்தவிதமான கவலையும் இல்லாமல் ஒருத்தன் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து பதறியடித்துக் கொண்டு ரயிலை நிறுத்திய லோகோ பைலட்டுக்கு எப்படி இருந்திருக்கும்?
தண்டவாளத்தில் தலை வெச்சு படுத்தாலே தற்கொலைக்கு முயலுவதாக நினைத்துக் கொள்வோம். ஆனால், இப்படி சொகுசாகவும் தலை வைத்து நிம்மதியா படுக்கலாம் என நினைச்சவனை என்ன சொல்வது?
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில், ரயிலின் லோகோ பைலட் இப்படி ஒரு மனுஷன் ரயில் தண்டவாளத்தில் குடைபிடித்தப்படி படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பதறியடித்து ரயிலை நிறுத்தியுள்ளார். பின்னர் அருகே சென்று பார்த்தப்போது முழு போதையில் இருந்த அந்த மனிதரை எழுப்பி, அவரைத் தண்டவாளத்திலிருந்து அகற்றும் வரை பயணிகளுடன் ரயில் நிறுத்தி வைத்து விட்டு, அதன் பின்னர் ரயிலை ஓட்டிச் சென்றார்.
அந்த மனிதர் தற்கொலைக்கு முயலவில்லை எனக் கூறப்படுகிறது. குடிபோதையில் தனது வீட்டின் படுக்கையறையும், தண்டவாளத்தையும் ஒப்பிட்டு குழப்பமடைந்துள்ளார். பலரும் சமூக வலைத்தளங்களில் இவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!