தண்ணீர் லாரி மோதியதில் இளைஞர் பலி... பெரும் சோகம்!
சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், வானகரத்தில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவர் தனது சகோதரர் மற்றும் நண்பருடன் காரில் கீழ்ப்பாக்கம்–பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வானகரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, கீழ்ப்பாக்கம் சிக்னல் அருகே வந்தபோது எதிர்திசையில் வந்த தண்ணீர் லாரி திடீரென வலதுபுறமாக திரும்பியது. இதனால், லாரி கார் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. காரில் இருந்த மூவரும் கடுமையாக காயமடைந்தனர். உடனடியாக மீட்புப் பணியாளர்கள் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் சிகிச்சை பலனின்றி விஜய் என்ற இளைஞர் உயிரிழந்தார். மற்ற இருவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்துக்காக தண்ணீர் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து, கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
