நடனமாடிய போதே இளைஞர் சரிந்து விழுந்து மரணம்... திருமண வரவேற்பில் சோகம்!
இளவயது மாரடைப்பு மரணங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. நடனம் ஆடிய போது சரிந்து மரணம், பள்ளி மாணவன் மயங்கி சரிந்து மரணம், கல்லூரி மாணவர் விளையாடிய போது மரணம், திருமண மேடையில் மயங்கி மரணம் என தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலம், மொளகாலமுரு தாலுகாவில் வசித்து வருபவர் ஆதர்ஷ். நேற்று பகடலபண்டே என்ற கிராமத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 23 வயதேயான ஆதர்ஷ் கலந்து கொண்டு நடனமாடினார். DJ இசைக்கு ஏற்ப துள்ளலாட்டம் போட்டுக்கொண்டிருந்த ஆதர்ஷ் திடீரென சுருண்டு கீழே விழுந்துள்ளார். பிறகு அங்கிருந்தவர்கள் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக இந்தியா முழுவதும் நடனமாடும் போது மாரடைப்பால் உயிரிழப்பு ஏற்படும் சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!