ஓலா, உபர் சேவைகளுக்கு 5% ஜி.எஸ்.டி – மத்திய அரசு அறிவிப்பு!

 
ஓலா, உபர் சேவைகளுக்கு 5% ஜி.எஸ்.டி – மத்திய அரசு அறிவிப்பு!

ஆன்லைன் மூலம் பதிவுசெய்யப்படும் வாடகை கார், ஆட்டோ சேவைகளான ஓலா, உபர் ஆகியவற்றிற்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு விதித்துள்ளது.

ஓலா, உபர் சேவைகளுக்கு 5% ஜி.எஸ்.டி – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியா முழுவதும் வாடகை வாகனங்களுக்கான ஆன்லைன் சேவைகளை ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்த ஆஃப்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சில நாட்கள் முன்பு வரை நேரடியாகவோ அல்லது ஆஃப்களின் மூலமோ பயணம் செய்யும் வாடகை வாகன சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வரி செலுத்துவதிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வாடகை வாகனங்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், நேரடியான வாடகை வாகனங்களுக்கான வரி விலக்கு தொடர்ந்து நீடிக்கும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இனி ஓலா மற்றும் உபர் போன்ற சேவைகளின் மூலம் வாடகை வாகனங்களை பதிவு செய்யும் பொழுது கட்டண உயர்வு அதிகமாகும். வாடிக்கையாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என அந்ததுறையைச் சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

From around the web