அதிமுகவினர் ஒற்றுமையாக ,ஒன்றிணைந்தும் உள்ளதாக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கூறியுள்ளார்

திமுக இஸ்லாமியர்களை புறக்கணிக்கின்ற இயக்கமாக உள்ளது.
 
தமிழ் மகன் உசேன்
தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி வர வேண்டி பிரார்த்தனை

அதிமுகவினர் ஒற்றுமையாகவும், ஒன்றிணைந்துமே உள்ளதாக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கூறியுள்ளார் 

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் ஆக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி விரைவில் மீண்டும் வரவேண்டும் என்று சென்னை எழும்பூரில் உள்ள மோத்தி பாபா தர்காவில் அதிமுக சார்பில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பிரார்த்தனை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்று கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தொடங்கிய ஆன்மீக பயணத்தில் இதுவரை 44 மாவட்டங்களில் பிரார்த்தனை செய்திருப்பதாகவும் அவர் கூறினார். அதிமுக ஒற்றுமையோடும் வலிமையோடும் இருப்பதற்கு கோவையில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் 7000க்கும் அதிகமான அதிமுகவினர் திரண்டு வந்து பிரார்த்தனையில் கலந்து கொண்டதாக கூறினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் இஸ்லாமியர்களை திமுக அரசு புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிருப்பதாக கூறியவர், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு மாநிலமாக தமிழகம் இருப்பதாக குற்றம் சாட்டினார்.  523 வாக்குறுதிகளை தந்து ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசு, அவற்றில் எதையும் நிறைவேற்ற முயற்சிக்கவில்லை என குற்றம் சாட்டினார். 

 

இந்த பிரார்த்தனை கூட்டத்தில் வடசென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் பாலகங்கா அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் மனு மற்றும் மாவட்ட பகுதி வட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட அதிமுக வினர் வேண்டுதல்

எழும்பூர் மோத்தி பாபா தர்காவில் அதிமுக வினர் திரளாக பங்கேற்று வேண்டுதல் 

திமுக இஸ்லாமியர்களை புறக்கணிக்கின்ற இயக்கமாக உள்ளது.

 ஒரு பெண் நடந்து சென்றால் துண்டு துண்டாக வெட்டுகின்ற காலமாகவும், பட்டப் பகலில் பலாத்காரம் நடைபெறும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது

 523 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்த திமுக அரசு எதையுமே செய்யவில்லை.

இந்த ஆட்சியை எப்போது வீட்டிற்கு அனுப்புவது எனவும், மீண்டும் எடப்பாடியை முதலமைச்சராக்கவும்  மக்கள் மத்தியில் எண்ணம் உள்ளது.

From around the web