அ.தி.மு.க உட்கட்சி தேர்தல்: இன்று தொடங்குகிறது வேட்பு மனு தாக்கல்

 
அ.தி.மு.க  உட்கட்சி தேர்தல்: இன்று தொடங்குகிறது வேட்பு மனு தாக்கல்

சென்னை அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அக்கட்சியி செயற்குழு கூட்டத்தில் தற்காலிக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து கட்சியின் முக்கிய பொறுப்புகளாக இருக்கும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை தேர்தெடுக்க தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க  உட்கட்சி தேர்தல்: இன்று தொடங்குகிறது வேட்பு மனு தாக்கல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் வேட்பு மனு தாக்கல் நாளை மாலை 3 மணிக்கு நிறைவடைகிறது. மனுக்கள் 5-ம் தேதி காலை பரிசீலிக்கப்படும் என்றும் 6-ம் தேதி மாலை 4 மணிவரை மனுவை திரும்ப பெறலாம் என்றும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

டிசம்பர் 7 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை நடத்தி, தேர்தல் முடிவு டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க  உட்கட்சி தேர்தல்: இன்று தொடங்குகிறது வேட்பு மனு தாக்கல்

தேர்தல் ஆணையாளர்கள்:

பொன்னையன் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
பொள்ளாச்சி வி.ஜெயராமன், எம்.எல்.ஏ கழக தேர்தல் பிரிவுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

வேட்பு மனு தாக்கல்: டிசம்பர் 3, 2021 காலை 10 மணி முதல் 4, 2021 சனிக் கிழமை பிற்பகல் 3 மணி வரை.

வேட்பு மனு பரிசீலனை: டிசம்பர் 5, 2021 ,காலை 11.25 மணி

வேட்பு மனு வாபஸ்: டிசம்பர் 6, 2021 மாலை 4 மணி வரை.

தேர்தல் நாள்: டிசம்பர் 7,2021, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

வாக்கு எண்ணிக்கை
டிசம்பர் 8, 2021 புதன் கிழமை. முடிவுகள் அன்றைய தினமே வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web