பரபர அரசியல் திருப்பங்கள்! சசிகலாவின் புதிய முடிவு!

 
பரபர அரசியல் திருப்பங்கள்! சசிகலாவின் புதிய முடிவு!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பியுள்ளார். நடந்து முடிந்த சசிகலா சட்டமன்ற தேர்தலில் ஈடுபடுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்ததற்கு நேர்மாறாக அரசியலில் இருந்து ஒதுங்கியதாக அறிவித்தார்.இந்நிலையில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. 65 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

பரபர அரசியல் திருப்பங்கள்! சசிகலாவின் புதிய முடிவு!

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரிடையே ஒருமித்த கருத்து இல்லாமல் தேர்தலை சந்தித்ததே தோல்விக்கு காரணம் என்று கட்சி நிர்வாகிகள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுவரை அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா தற்போது அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசி வருவது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.அத்துடன் கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரபர அரசியல் திருப்பங்கள்! சசிகலாவின் புதிய முடிவு!


இதுகுறித்து எடப்பாடி விடுத்த செய்திக்குறிப்பில் ‘‘சசிகலா அ.தி.மு.க.வினர் யாருடனும் அவர் பேசவில்லை. அவரது கட்சி நிர்வாகிகளிடம் பேசியுள்ளார்’’ என்று திட்டவட்டமாக கூறினார். ஆனால் அடுத்தடுத்து அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது அ.தி.மு.க.வில் ஒருமித்த கருத்து இல்லாத காரணத்தால் வேதனை அடையும் நிர்வாகிகளுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் சசிகலா பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும், ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொது போக்குவரத்து அமலுக்கு வந்ததும் சசிகலா ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுவார் எனவும், இதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களில் பெரும் அரசியல் திருப்பங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

From around the web