முதல் முயற்சி தோல்வி: தொடர்வண்டி தனியார்மயத்தை கைவிட வேண்டும்! – டாக்டர் ராமதாஸ்

 
முதல் முயற்சி தோல்வி: தொடர்வண்டி தனியார்மயத்தை கைவிட வேண்டும்! – டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

தெற்கு தொடர்வண்டித்துறை சார்பில் தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டிலிருந்தும் இயக்கப்படும் 13 விரைவுத் தொடர்வண்டிகளை தனியார்மயமாக்கும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதன்மூலம் தொடர்வண்டி சேவையை ஏழை மற்றும் நடுத்தர மக்களிடமிருந்து தட்டிப் பறிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது.

முதல் முயற்சி தோல்வி: தொடர்வண்டி தனியார்மயத்தை கைவிட வேண்டும்! – டாக்டர் ராமதாஸ்

தாராளமயமாக்கல் என்பதே தனியார்மயமாக்கல் தான் என்றாகி விட்ட நிலையில், அந்த நடவடிக்கைகளின் நீட்சியாக தொடர்வண்டி சேவைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டின் மத்தியில் தொடங்கப்பட்டன. நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 தொடர்வண்டிகள் தனியார்மயமாக்க மத்திய அரசு தீர்மானித்தது. அவற்றில் சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மும்பை, தில்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 12 தொடர்வண்டிகள், கன்னியாகுமரியிலிருந்து எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் தொடர் வண்டி ஆகிய 13 தொடர்வண்டிகளை தனியார் மயமாக்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருந்த நிலையில், எந்த நிறுவனமும் அந்தத் தடங்களில் தொடர்வண்டிகளை இயக்குவதற்கு முன்வரவில்லை.

முதல் முயற்சி தோல்வி: தொடர்வண்டி தனியார்மயத்தை கைவிட வேண்டும்! – டாக்டர் ராமதாஸ்

அகில இந்திய அளவில் கூட தில்லியிலும், மும்பையிலும் சில தொடர்வண்டிகளை மட்டும் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. தனியார்மயமாக்கப்படவிருந்த தொடர்வண்டிகளில் 95%க்கும் கூடுதலானவற்றை ஏலம் எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. உண்மையில், தொடர்வண்டிகளை தனியார்மயமாக்க நினைத்த மத்திய அரசுக்கு இது பெரும் ஏமாற்றமாக இருக்கலாம். ஆனால், நீண்ட தொலைவு பயணத்திற்கு தொடர்வண்டிகளையே நம்பியிருக்கும் மக்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி தான். தொடர்வண்டிகள் தனியார்மயமாகி விடக்கூடாது என்பது தான் பெரும்பான்மையினரின் விருப்பம்.

இந்தியாவைப் பொருத்தவரை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தொடர்வண்டி சேவைகள் என்பது மிகப்பெரிய வரம் ஆகும். பேருந்துகளுடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்கு தொடர்வண்டி சேவைகள் மட்டும்தான் ஒரே வாய்ப்பாகும். இத்தகைய தொடர்வண்டிகள் தனியார் மயமாக்கப்பட்டால், அவற்றின் கட்டணம் எட்டாத உயரத்திற்கு சென்றுவிடும்.

முதல் முயற்சி தோல்வி: தொடர்வண்டி தனியார்மயத்தை கைவிட வேண்டும்! – டாக்டர் ராமதாஸ்

சரக்குப் போக்குவரத்தில் மிக அதிக லாபம் ஈட்டும் தொடர்வண்டித்துறை, அதை பயணிகள் சேவைக்கு மானியமாக வழங்குகிறது. அதனால், பயணிகள் கட்டணத்தில் சராசரியாக 47% மானியமாக வழங்கப் படுகிறது. தொடர்வண்டிகள் தனியார்மயமாக்கப்படும் போது அவற்றை இழப்பு இல்லாமல் இயக்குவதற்கே சராசரியாக 47% கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கும். அத்துடன் தனியார் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் லாபத்தையும் சேர்த்தால் தொடர்வண்டிக் கட்டணம் 70% வரை உயர்த்தப்படக்கூடும். அந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டால், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களால் தொடர்வண்டிகளில் பயணிக்க முடியாது.

முதல் முயற்சி தோல்வி: தொடர்வண்டி தனியார்மயத்தை கைவிட வேண்டும்! – டாக்டர் ராமதாஸ்

தொடர்வண்டிகளை ஏலத்தில் எடுத்து இயக்க தனியார் நிறுவனங்கள் முன்வராததற்கு இரு காரணங்கள் உள்ளன. முதலாவது வருவாய் பகிர்வு நிபந்தனை. ஒரு தொடர்வண்டியை தனியார் இயக்கும்பட்சத்தில் அதன் வருவாயில் ஒரு பங்கை தொடர்வண்டித்துறைக்கு வழங்க வேண்டும். அதற்கு எந்த நிறுவனமும் தயாராக இல்லை. இரண்டாவது கட்டண உயர்வு. இந்தியாவில் எல்லா தொடர்வண்டிகளும் தனியார்மயமாக்கப்படப்போவதில்லை. 10%க்கும் குறைவான தொடர்வண்டிகள் மட்டும் தான் தனியார்மயமாக்கப்படவுள்ளன. அந்த வண்டிகளை இயக்கும் நிறுவனங்கள் கட்டணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக் கொள்ள முடியும். ஆனால், மீதமுள்ள 90% தொடர்வண்டிகளில் கட்டணம் குறைவாக இருக்கும் என்பதால் தனியார் தொடர்வண்டிகளுக்கு வரவேற்பு இருக்காது என்பதால் தான் தனியார் நிறுவனங்கள் தொடர்வண்டிகளை இயக்க முன்வரவில்லை.

தொடர்வண்டிகளை தனியார்மயமாக்கும் முயற்சி தோல்வியடைந்திருந்தாலும் அது தற்காலிகமானது தான். தொடர்வண்டிகள் தனியார்மயமாக்கப்படும் வாய்ப்புகள் இன்னும் முழுமையாக விலகவில்லை என்பது தான் உண்மை. வருவாய் பகிர்வு நிபந்தனையை மத்திய அரசு தளர்த்தினாலோ, பெரும்பான்மை தொடர்வண்டிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முன்வந்தாலோ நிலைமை தலைகீழாக மாறிவிடும். அதன்பின்னர் தனியார் நிறுவனங்கள் வைத்தது தான் சட்டம் என்பதால், தொடர்வண்டித்துறை தனியார் பெரு நிறுவனங்களின் லாப வேட்டைக்காடாகிவிடும். அவற்றின் ஆதிக்கத்தை யாராலும் தடுக்க முடியாது.

முதல் முயற்சி தோல்வி: தொடர்வண்டி தனியார்மயத்தை கைவிட வேண்டும்! – டாக்டர் ராமதாஸ்

தொடர்வண்டிகளை இயக்க தனியார் நிறுவனங்கள் முன்வராததைக் காரணம் காட்டி, வருவாய் பகிர்வு நிபந்தனையை ரத்து செய்யவும், அதிக எண்ணிக்கையிலான தொடர்வண்டிகளை தனியார் மயமாக்கவும் மத்திய அரசு முன்வரக்கூடும். அது மக்களுக்கோ, மத்திய அரசுக்கோ நன்மையளிப்பதாக இருக்காது. மாறாக, தனியார் நிறுவனங்கள் இந்திய மக்களையும், தொடர்வண்டித்துறையின் கட்டமைப்புகளையும் சுரண்டுவதற்கே வழிவகுக்கும். எனவே, தொடர்வண்டிகளை தனியார்மயமாக்கும் முயற்சி தோற்றதாகவே இருக்கட்டும்; மீண்டும் அந்த முயற்சியை மத்திய அரசு தொடங்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

From around the web