அதிமுக கொள்கை பரப்பு துணை பொதுச் செயலாளராக கவுதமி நியமனம்!
நடிகை கவுதமிக்கு அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடிகை கவுதமி, பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க.வில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக வுக்காக பல்வேறு தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், கட்சியில் அவருக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் அதிமுக கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு கவுதமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதே போல, மேலும் சிலருக்கு கட்சியின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் துணை செயலாளராக தடா பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளராக பாத்திமா அலியும், கழக விவசாயப்பிரிவு துணை செயலாளராக சன்னியாசியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
