தீவிரமடையும் கொரோனா! மோடியின் வெளிநாட்டு பயணம் ரத்து!

 
தீவிரமடையும் கொரோனா! மோடியின் வெளிநாட்டு பயணம் ரத்து!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 4 நாட்களாக 2 லட்சத்திற்கு மேலாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

தீவிரமடையும் கொரோனா! மோடியின் வெளிநாட்டு பயணம் ரத்து!

இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் காரணமாக இந்தியா செல்லவேண்டாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ், போர்ச்சுகல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளன. மே மாதத்தில் திட்டமிடப்பட்ட இருதரப்பு பயணத்தையும் மோடி தவிர்த்துள்ளார்.

மே 8ம் தேதி போர்ச்சுகலில் நடைபெற உள்ள 16வது இந்தியா ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவும், அதைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிற்கும் செல்ல இருந்தார். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டை காணொலி காட்சியின் வாயிலாக நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமடையும் கொரோனா! மோடியின் வெளிநாட்டு பயணம் ரத்து!

இதனிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் இந்தியாவுக்கான பயணத்தை இரண்டாவது முறையாக நிறுத்தி வைத்துள்ளார். ஏப்ரல் 25ம் தேதி ஜான்சன் இந்தியாவுக்கு வருகை தருவதாக இருந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனாவின் தீவிரம் காரணமாக அவரது இந்திய பயணத் திட்டம் இரு முறைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web