பாஜக ஆள்கிற மாநிலங்களுக்குச் சென்று ஹெச்.ராஜா போராட்டம் செய்யட்டும்! பா.சிதம்பரம் பதிலடி!

 
பாஜக ஆள்கிற மாநிலங்களுக்குச் சென்று ஹெச்.ராஜா போராட்டம் செய்யட்டும்!  பா.சிதம்பரம் பதிலடி!

பல்வேறு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கும் அனுமதி வழங்கியது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று, பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்நிலையில், பாஜக ஆள்கின்ற மாநிலங்களுக்குச் சென்று ஹெச்.ராஜா போராட்டம் நடத்தட்டும். என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாடு முழுவதும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஹெச்.ராஜா சென்று மதுக்கடைகளை மூடச் சொல்லி பிரசாரம் செய்ய வேண்டும் என்று தெரிவித்த பா.சிதம்பரம், டாஸ்மாக் கடைகளை மூடச் செய்தால், அதன் பின்னர் கள்ளச்சாராயம் பெருகி விடும் என்று தெரிவித்தார்.

From around the web