இன்று மோடியை சந்திக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ் !

 
இன்று மோடியை சந்திக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ் !

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் அதிமுகவில் எதிர்கட்சியாக உள்ளது. அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . ஒபிஎஸ், இபிஎஸ் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு, தொண்டர்கள், சசிகலா என பிரச்சனைகள் வரிசைகட்டி நிற்கின்றன.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அதே நேரத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கோவை விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து, பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை 11.05 மணிக்கு எடப்பாடி சந்திக்க இருக்கிறார். அதில் தமிழகத்தின் மேகதாது விவகாரம், உள்ளாட்சித் தேர்தல், தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் அளிக்காதது பற்றி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன் பேசுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

From around the web