அனைத்து அரசு வேலைகளிலும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு! அதிரடி அறிவிப்பு!

 
அனைத்து அரசு வேலைகளிலும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு! அதிரடி அறிவிப்பு!

அரசு வேலைகளில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில், கான்ஸ்டபிள் படையில் மூன்றாம் பாலினத்தவர் சேர அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராகச் சங்கமா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாகக் கர்நாடக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. அதாவது கடந்த ஜூலை 6ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, அனைத்து அரசு வேலைகளிலும் பொதுப் பிரிவிலும் சரி, இதர பிரிவுகளில் சரி திருநங்கைகளுக்கு ஒரு சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதை தெரிவித்தது.

அனைத்து அரசு வேலைகளிலும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு! அதிரடி அறிவிப்பு!

அரசு வேலை தொடர்பான விண்ணப்பங்களில் ஆண், பெண் பிரிவுகளுடன் ‘மற்றவர்கள்’ என்ற பிரிவு இருக்கும். வேலைக்குத் தேர்வு செய்யும் முறையில் திருநங்கைகளுக்கு எதிராக எந்தவொரு பாகுபாடும் காட்டக்கூடாது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தனியாக வழக்கு தொடர்ந்தால், அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறிய உயர் நீதிபதிகள், கர்நாடக அரசின் நடவடிக்கையைப் பாராட்டினர்.

From around the web