தனி விமானம் மூலம் `ரெம்டெசிவிர்’ மருந்தை கொண்டு வந்த தமிழிசை !

 
தனி விமானம் மூலம் `ரெம்டெசிவிர்’ மருந்தை கொண்டு வந்த தமிழிசை !

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா முதல் அலையை விட 2வது அலை மிகத் தீவிரமாக கொத்து கொத்தாக பரவி வருகிறது. இதனையடுத்து மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.

அந்த வகையில் புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு செலுத்தப்படும் ‘ரெம்டெசிவிர்’ மருந்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அந்த மருந்து பெற்று வர நடவடிக்கை எடுத்துள்ளார், ‘யுகாதி’ பண்டிகையை கொண்டாட ஐதராபாத் சென்ற தமிழிசை தனி விமானத்தில் புதுச்சேரி திரும்பும் போது ‘ரெம்டெசிவிர்’ மருந்து 1000 டோசை கையோடு எடுத்து வந்து அந்த மருந்தை சுகாதாரத்துறை செயலர் அருணிடம் ஒப்படைத்தார்.

தனி விமானம் மூலம் `ரெம்டெசிவிர்’ மருந்தை கொண்டு வந்த தமிழிசை !

அது குறித்து விடுத்த செய்திக்குறிப்பில் புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுப்பது தொடர்பாக உயர்அதிகாரிகளுடன் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில், ‘ரெம்டெசிவிர்’ மருந்து புதுவையில் முற்றிலும் தீர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த மருந்து ஐதராபாத்தில் தான் தயாரிக்கப்படுகிறது.இதே போன்ற தட்டுப்பாடு தமிழகத்தில் வந்த போது ஐதராபாத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. யுகாதி பண்டிகையை கொண்டாட தெலுங்கானா சென்ற போது ‘ரெம்டெசிவிர்’ மருந்தை புதுவைக்கு பெற ஐதராபாத் நிறுவனத்திடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்ததுடன் மத்திய சுகாதாரத்துறை மற்றும் தெலுங்கானா சுகாதாரத்துறையிடம் பேசியதால் 1000 டோஸ் ‘ரெம்டெசிவிர்’ மருந்து புதுவைக்கு கிடைத்தது. கையோடு விமானத்தில் எடுத்து வந்தேன் எனத் தெரிவித்துள்ளார் .

dinamaalai.com

From around the web