வறண்டு கிடக்கும் கோயில் குளங்கள்! கவனிப்பாரா அறநிலையத்துறை அமைச்சர்!

 
வறண்டு கிடக்கும் கோயில் குளங்கள்! கவனிப்பாரா அறநிலையத்துறை அமைச்சர்!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலாகவே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கோயில் நிலங்கள் மீட்பு, ஆக்கிரமிப்புக்களை அகற்றுதல் ஆகியவை சமூக ஆர்வலர்களிடையே மட்டுமல்ல பொதுமக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோடிக்கணக்கில் அபகரிப்பு செய்யப்பட்ட கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

வடபழனி கோயில் நிலங்கள் மீட்பு, ஸ்ரீரங்கம் ஆக்கிரமிப்புக்கள் அகற்றம் என தடாலடியாக செயல்பட்டு பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். மேலும் தமிழில் அர்ச்சனை, கோவில் நிலங்களை ஆவணப்படுத்துதல் , வெளிப்படைத் தன்மையுடன் இணையத்தில் பதிவேற்றம் என அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

வறண்டு கிடக்கும் கோயில் குளங்கள்! கவனிப்பாரா அறநிலையத்துறை அமைச்சர்!

கோயில் நிலங்களை அசுர வேகத்தில் மீட்டெடுக்கும் அறநிலையத்துறை அமைச்சர் அப்படியே வறண்டு, கவனிப்பாரற்று கிடக்கும் தமிழகத்தின் புகழ் பெற்ற கோயில்களின் குளங்களையும் கவனிப்பாரா? என்று ஏக்கத்துடன் எதிர்பார்க்கிறார்கள் பக்தர்கள்.

தற்போது இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி விடும். அதற்குள் கோவில் குளங்களிலும் ஆக்கிரமிப்புக்களை அகற்றி, தூர்வாரி, ஆழப்படுத்தினால் கோவில்களை சுற்றியுள்ள குடியிருப்புகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

கோவில் இல்லா ஊரில் குடியிருக்காதே என்பது பழமொழி. தமிழகத்தின் அனைத்து இந்து கோவில்களுக்குமே குளங்கள் உண்டு. அவை பெரும்பாலும் தூர்ந்து போய் கவனிப்பாரற்று, முட்செடிகள் புதர் போல் வளர்ந்து கேட்பாரற்று கிடக்கின்றன. இந்த காலத்தை தவறவிட்டால் அதில் இயற்கையாக நீர் நிரம்பச் செய்ய வழி இல்லாது போய்விடும்.

வறண்டு கிடக்கும் கோயில் குளங்கள்! கவனிப்பாரா அறநிலையத்துறை அமைச்சர்!

சமீபகாலமாக பருவமழை தப்பி பெய்து வருகிறது. சில ஆண்டுகளில் கொட்டித் தீர்க்கும் மழை பல நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் சென்னை நகரின் பலபகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. ஆனால் அந்த ஏரியில் தண்ணீரின்றி வறண்டு ஆடு, மாடுகள் புல் மேயும் காலமும் வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மழைப் பொழிவு இருக்கும் என்பதை வானிலை நிபுணர்களால் ஓரளவு தான் கணிக்க முடியுமே தவிர சரியாக யாராலும் அறுதியிட்டு கூற முடியாது.

வறண்டு கிடக்கும் கோயில் குளங்கள்! கவனிப்பாரா அறநிலையத்துறை அமைச்சர்!

திருவிழாக்கள் நடக்கும் தை, மாசி , பங்குனி மாதங்களில் குளங்களை பேருக்கு சுத்தம் செய்து லாரிகள் மூலம் நீரை நிரப்பி திருவிழா கொண்டாடுகிறோம். மன்னர்கள் காலத்தில் கோவில்களும், குளங்களும் கட்டமைக்கப்பட்டன. அவற்றை பராமரிக்கும் பணிகளை மட்டுமாவது மக்களாட்சியில் நாம் செய்ய முயற்சிப்போம். மக்களின் வாழ்வாதாரம், வளர்ச்சி, மேம்பாடு அனைத்துக்கும் அடிப்படை அத்தியாவசிய தேவையான நீர்வளத்தை பெருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

பொதுவாகவே தமிழகத்தில் கோடை காலத்தில் நீர்வளப் பற்றாக்குறை உண்டு என்பதால் மழை பெய்யும் போது கிடைக்கும் தண்ணீரை சிந்தாமல் சிதறாமல் பத்திரமாக சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏரி, குளங்கள் மற்றும் அணைகளையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்.

வறண்டு கிடக்கும் கோயில் குளங்கள்! கவனிப்பாரா அறநிலையத்துறை அமைச்சர்!

இந்த முயற்சியை கோவில் குளங்களில் இருந்து தொடங்குவோம். பெய்யும் மழை நீரை ஒரு சொட்டு நீரை கூட வீணாக்காமல் சேமித்து வைப்போம்.

ஊர்கூடி தேர் இழுப்பது தான் உன்னத முயற்சி. இந்த முயற்சியில் பொதுமக்களையும் ஒன்றிணைத்து நீர் ஆதாரங்களான கோவில் குளங்கள், ஏரிகள், அணைக்கட்டுகளை தூர்வாருவோம். இதுவே எதிர்கால சந்ததியின் வளமான வாழ்வுக்கு நாம் அமைத்துக் கொடுக்கும் வலுவான அடித்தளமாக இருக்கும்

From around the web