மத்திய அரசு இனி பாரத பேரரசு என அழைக்கப்படும்! நடிகை குஷ்பு !

 
மத்திய அரசு இனி பாரத பேரரசு என அழைக்கப்படும்! நடிகை குஷ்பு !


தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வெளியிடப்படும் அனைத்து அறிக்கைகளிலும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகின்றனர்.ஆனால் இந்த ஒன்றிய அரசு என்ற இந்த சொல்லாடல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் பா.ஜனதாவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

மத்திய அரசு இனி பாரத பேரரசு என அழைக்கப்படும்! நடிகை குஷ்பு !


இதற்கு சில கட்சிகள் ஒன்றிய அரசு என்பது சட்டப்படியானது தான் எனவும் ஆதரவும் ட் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பா.ஜனதா பிரமுகரும், நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பவர்கள் அனைவருமே மத்திய அரசின் ஒரு பகுதியாக இருந்து அதிகபட்ச நலன்களை பெற்று வருபவர்கள் தான்.

மத்திய அரசு இனி பாரத பேரரசு என அழைக்கப்படும்! நடிகை குஷ்பு !

50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் இருந்து நாட்டை ஆட்சி செய்தவர்களும் இப்படி அழைப்பது தான் வேதனை. தற்போது தமிழகத்தில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை உள்ளது. மத்திய அரசை ஒன்றிய அரசு என மற்றவர்கள் அழைத்தால் நாம் அனைவரும் இனி பாரத பேரரசு என்று அழைப்போம். தமிழ்நாடு இப்போது மட்டுமல்ல எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே. வாழ்க பாரத தேசம். வாழ்க தமிழகம் எனப் பதிவிட்டுள்ளார்.

From around the web