இன்று மாலை நடைபெறுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்

 
இன்று மாலை நடைபெறுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று 2வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்த பிறகு 2 ஆண்டுகள் கழித்து நேற்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 43 புதிய மத்திய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டமும், இரவு 7 மணிக்கு அமைச்சர்கள் குழு கூட்டமும் நடைபெறுகிறது.

From around the web