மருத்துவர்களுக்கு எச்சரிக்கை ! 18 வயதுக்குள் இருப்பவர்களுக்கு இந்த மருந்தைத் தரக் கூடாது! கொரோனா சிகிச்சையில் புது அறிவிப்பு!

மருத்துவர்களுக்கு எச்சரிக்கை ! 18 வயதுக்குள் இருப்பவர்களுக்கு இந்த  மருந்தைத் தரக் கூடாது! கொரோனா சிகிச்சையில் புது அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3 வது அலை பரவலாம் எனவும் அந்த அலையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் எனவும் மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் 3ம் அலையில் உருவாகும் பாதிப்பை நிர்வகிப்பதற்கான சில புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்படக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களுக்கு எச்சரிக்கை ! 18 வயதுக்குள் இருப்பவர்களுக்கு இந்த  மருந்தைத் தரக் கூடாது! கொரோனா சிகிச்சையில் புது அறிவிப்பு!

18 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ரெம்டெசிவிர் மருந்து போதுமான பாதுகாப்பு மற்றும் செயல்திறனை வழங்குவதற்கான ஆய்வுகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இதனை குழந்தைகளுக்கு செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
அதே போல் கொரோனா அறிகுறி அற்ற மற்றும் லேசான அறிகுறி கொண்ட குழந்தைகளில் ஸ்டிராய்டுகளின் பயன்பாடு அதிக தீங்கினை விளைவிக்கும். இதனால் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

From around the web