தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? பிரதமர்-ஸ்டாலின் நாளை மறுநாள் சந்திப்பு!

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? பிரதமர்-ஸ்டாலின் நாளை மறுநாள் சந்திப்பு!

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் முதன்முறையாக டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேச இருக்கிறார். அந்த சந்திப்பில் தமிழகத்திற்கு தேவையான 25க்கும் அதிகமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் ஸ்டாலின் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? பிரதமர்-ஸ்டாலின் நாளை மறுநாள் சந்திப்பு!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதால் பிரதமர் அலுவலகத்தில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை மறுநாள் ஜூன் 17ம் தேதி காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்க, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? பிரதமர்-ஸ்டாலின் நாளை மறுநாள் சந்திப்பு!

பிரதமர் மோடியை சந்திக்கும் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழகத்திற்கு தேவையான 25-க்கும் அதிகமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது தவிர, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

From around the web