உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார நிறுவனம்!

 
உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார நிறுவனம்!


சீனாவில் 2019 இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா முதல் அலையில் கட்டுப்படுத்தும் அளவுக்கு மட்டுமே பரவியது. கொரோனாவின் 2வது அலை உலகம் முழுவதும் பாதிப்பு பல மடங்காக அதிகரித்து வருகிறது.
இதனால் தமிழகம் தொடங்கி இந்தியா வரை தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார நிறுவனம்!


இந்நிலையில் நாம் கொரோனா தொற்று பரவலின் முக்கியமான கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றானது அதிவேகமாக வளர்ந்து வருவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார நிறுவனம்!


பொது சுகாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட குழப்பம், அலட்சியம் போன்றவை கொரோனா உயிரிழப்புகளை அதிகரிக்கக் காரணமாக உள்ளதாகக் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 13.74 கோடி பேர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

dinamaalai.com

From around the web