AUS vs WI ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக அலெக்ஸ் கேரி

 
AUS vs WI ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக அலெக்ஸ் கேரி

ஆஸ்திரேலிய அணி, மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 T20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற T20 தொடரில், 4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் T20 கேப்டனாக உள்ள ஆரோன் பிஞ்ச், முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நாளை நடைபெறும் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி, தற்போது ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனான பதவியேற்கும் 26வது நபர்.

From around the web