கொரோனா எதிரொலி! ஒலிம்பிக் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

 
கொரோனா எதிரொலி! ஒலிம்பிக் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!


உலகம் முழுவதும் கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
உலகம் முழுவதும் தற்போது கொரோனா 3வது அலை உருவாகி வருவதால் ஜப்பானிலும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. டோக்கியோவில் ஜனவரி மாதத்திற்குப் பிறகு தற்போது தான் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா எதிரொலி! ஒலிம்பிக் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!


ஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 11,500 வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப், அதிகாரிகள் என மொத்தமாக 79000 பேர் குவியத் தொடங்கியுள்ளனர். டோக்கியோவில் இவர்களுக்காக ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் இவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு எச்சரிக்கை, அபராதம், போட்டியை விட்டு நீக்குதல் என கடுமையான தண்டனை விதிக்கப்படும் என புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளது.

கொரோனா எதிரொலி! ஒலிம்பிக் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!


அதன்படி
ஒலிம்பிக் வீரர்கள் யாரும் உடலுறவில் ஈடுபடக் கூடாது.
ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கக் கூடாது.
உணவுக் கூடங்களில் தனித்தனியாகவே சாப்பிட வேண்டும்.
பதக்கம் வாங்க செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம்.
தினமும் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும்
விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரர்- வீராங்கனைகள் கட்டாயம் ஸ்மார்ட்போன்களை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். அதில் இரண்டு ஆப்களை (Apps) பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.அதில் ஒன்று உடல்நிலையை பரிசோதிக்கவும், மற்றொன்று அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளவும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் இல்லை என்றால், விமான நிலையத்தில் வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம். போன் இல்லாமல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியாது என ஒலிம்பிக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

From around the web