இங்கிலாந்து – நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: 22 வருடத்திற்குப் பிறகு தொடரை வென்று சாதனை படைத்த நியூசிலாந்து

 
இங்கிலாந்து – நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: 22 வருடத்திற்குப் பிறகு தொடரை வென்று சாதனை படைத்த நியூசிலாந்து

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

கடந்த 10-ந்தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கிய 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் டிரென்ட் போல்ட், மேட் ஹென்ரி, அஜாஸ் பட்டேல் ஆகியோரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 303 ரன்னில் சுருண்டது. ரோரி பேர்னஸ், டான் லாரன்ஸ் தலா 81 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்தின் டேவன் கான்வே (80), வில் யங் (82), ராஸ் டெய்லர் (80) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 388 ரன்கள் குவித்து 85 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்து அடுத்து பெவிலியன் திரும்பினார்.

நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 122 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஒல்லி ஸ்டோன் 15 ரன்னில் வெளியேற 122 ரன்னிலேயே இங்கிலாந்து அணி தனது அணைத்து விக்கெட்டையும் இழந்தது. மேட் ஹென்ரி, நீல் வாக்னர் தலா 3 விக்கெட்டும் டிரென்ட் போல்ட், அஜாஸ் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

நியூசிலாந்துக்கு 38 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நியூசிலாந்து அணி 10.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது. மேலும் இங்கிலாந்து மண்ணில் 1999-க்குப் பிறகு தொடரை வென்று சாதித்துள்ளது.

மேட் ஹென்ரி ஆட்ட நாயகன் விருதையும், முதல் டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய டேவன் கான்வே தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

From around the web