பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கடுமையான போராட்டத்திற்குப்பின் சிட்சிபாஸை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார் ஜோகோவிச்

 
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கடுமையான போராட்டத்திற்குப்பின் சிட்சிபாஸை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார் ஜோகோவிச்

பாரீஸ் நகரில் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 5-ம் நிலை வீரர் சிட்சிபாசும் (கிரீஸ்) மோதினர்.

13 முறை சாம்பியன் பட்டம் வென்ற நடாலை அரை இறுதியில் வென்ற ஜோகோவிச்சை தொடக்கத்தில் சிட்சிபாஸ் தடுமாற வைத்தார். இதனால் முதல் செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் 6-7(8) என முதல் செட்டை கைப்பற்றிய சிட்சிபாஸ் 2-வது செட்டையும் 2-6 என்று தனக்குரியதாக்கினார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கடுமையான போராட்டத்திற்குப்பின் சிட்சிபாஸை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார் ஜோகோவிச்
Stefanos Tsitsipas and Novak Djokovic – Image Credit – Roland-Garros @rolandgarros

இரு செட் பின்தங்கிய நிலையிலும் மனம் தளராத ஜோகோவிச் ஆக்ரோஷமாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-3, 6-2, என்று அடுத்த இரு செட்டுகளை கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இதையடுத்து கடைசி செட் மேலும் சூடுபிடிக்க தொடங்கியது, கடைசியில் ஜோகோவிச்சின் 6-4 என்று கடைசி செட்டை தனதாகி வெற்றிப்பயணத்தை தொடர்ந்தார்.

4 மணி 11 நிமிடங்கள் நீடித்த திரில்லிங்கான போட்டியில் ஜோகோவிச் 6-7(6), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சிட்சிபாசை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றினார்.

ஜோகோவிச்சுக்கு இது 19-வது (ஆஸ்திரேலிய ஓபன்-9, பிரெஞ்ச் ஓபன்-2, விம்பிள்டன்-5, அமெரிக்க ஓபன்-3) கிராண்ட்ஸ்லாம் ஆகும்.

அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களின் வரிசையில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், ஸ்பெயினின் ரபெல் நடாலும் தலா 20 கிராண்ட்ஸ்லாமுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். அவர்களை நெருங்கி விட்ட ஜோகோவிச் அவர்களின் சாதனையை சமன் செய்ய வாய்ப்புள்ளது.

ஜோகோவிச்சுக்கு ரூ.12.5 கோடியும், கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக இறுதி சுற்றுக்கு வந்து 2-வது இடத்தை பிடித்த சிட்சிபாசுக்கு ரூ.6.75 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

From around the web