பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நீண்ட போராட்டத்திற்கு பின் 4வது சுற்றுக்கு முன்னேறினார் பெடரர்

 
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நீண்ட போராட்டத்திற்கு பின் 4வது சுற்றுக்கு முன்னேறினார் பெடரர்

பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், ஜெர்மன் வீரர் டொமினிக் கோப்ஃபெர் ஆகியோர் மோதினர்.

இதில், ரோஜர் பெடரர் முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை ஜெர்மனி வீரர் டொமினிக் கோப்ஃபெர் 7-6 என கைப்பற்றினார். இறுதியில் பெடரர் 7-6, 6-7, 7-6, 7-5 என்ற கணக்கில் ஜெர்மனி வீரரை போராடி வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

From around the web