இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு: பிரதமர்

 
இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு: பிரதமர்

இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு எப்போதும் சிறப்பான இடம் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நமது குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் சாம்பியன் மற்றும் உற்சாகத்தின் ஊற்று என அவர் கூறினார்.

இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு: பிரதமர்

விளையாட்டு வீரர்களுக்கு நிலையான ஆதரவு அளித்ததற்காக அவர்களின் பயிற்சியாளர்கள், உதவி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரை பிரதமர் பாராட்டினார். தனித்துவமான விருந்தோம்பல், முக்கிய விஷயங்களை கவனித்தது, அதிகம் தேவையான மீள் தகவல்களை பரப்பியது, இந்த ஒலிம்பிக் மூலம் ஒன்றாக இருந்தது ஆகியவற்றுக்காக ஜப்பான் குறிப்பாக டோக்கியோ மக்கள், ஜப்பான் அரசை அவர் பாராட்டினார்.

இது குறித்து பிரதமர் டுவிட்டரில் கூறியதாவது:

‘‘ இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ #Paralympics-க்கு எப்போதும் சிறப்பான இடம் உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டி, ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் இருக்கும் மற்றும் பல தலைமுறை விளையாட்டு வீரர்கள், விளையாட்டுகளை தொடர ஊக்குவிக்கும். நமது குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் சாம்பியன் மற்றும் உற்சாகத்தின் ஊற்று.

இந்தியா வென்ற அதிக எண்ணிக்கையிலான பதக்கங்கள், நமது மனதை மகிழ்ச்சியால் நிறைத்துள்ளன. இதற்காக விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்கள், உதவி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரை பாராட்ட விரும்புகிறேன். விளையாட்டுகளில் நமது வெற்றிகள் அதிக பங்கேற்பை உறுதி செய்யும் என நம்புகிறோம்.

நான் முன்பு கூறியது போல், ஜப்பான், குறிப்பாக டோக்கியோ மக்கள் மற்றும் ஜப்பான் அரசு, தனித்துவமான விருந்தோம்பல், முக்கிய விஷயங்களை கவனித்தது, அதிகம் தேவையான மீள் தகவல்களை பரப்பியது, இந்த ஒலிம்பிக் மூலம் ஒன்றாக இருந்தது ஆகியவற்றுக்காக பாராட்டப்பட வேண்டும்’’ என கூறியுள்ளார்.

From around the web