இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இன்று 3வது டெஸ்ட் போட்டி

 
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இன்று 3வது டெஸ்ட் போட்டி

இந்திய – இங்கிலாந்துக்கு இடையே நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி இன்று (25-ம் தேதி) லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் தொடங்குகிறது.

நாட்டிங்காமில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் கடைசி நாளில் மழை காரணமாக டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து லண்டன் லார்ட்சில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதோடு தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3, டென் 4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

From around the web