இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர்: இன்று 2வது ஒரு நாள் போட்டி

 
இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர்: இன்று 2வது ஒரு நாள் போட்டி

இந்தியா-இலங்கை இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித்தொடர் ஜூலை 13ம் தேதி இலங்கையில் உள்ள கொழும்பில் தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்றுள்ளது.

இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர்: இன்று 2வது ஒரு நாள் போட்டி

இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர்: இன்று 2வது ஒரு நாள் போட்டி

இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

From around the web