Connect with us

செய்திகள்

சீனாவின் ஸ்பான்சரை நீக்கிய இந்திய அணி! குவியும் பாராட்டுக்கள்!

Published

on


32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்டு 8 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கான சீருடை உட்பட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சீனாவைச் சேர்ந்த லி நிங் என்ற விளையாட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ ஸ்பான்சர் ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்டு இருந்தது.


இந்தியாவிற்கும், சீனாவிற்கும் எல்லை பிரச்சனையில் பனிப்போர் நிலவி வரும் நிலையில் சீன நாட்டை சேர்ந்த நிறுவனத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஸ்பான்சர் ஒப்பந்தம் செய்ததற்கு கடும் எதிர்ப்புக்கள் உருவாகின. இந்த கோரிக்கைகளை ஏற்கும் வகையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் ‘கிட்ஸ்’ ஸ்பான்சர் ஒப்பந்தத்தில் இருந்து லி நிங் நிறுவனம் விடுவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘சீன நிறுவனம் ஸ்பான்சரில் இருந்து நீக்கப்பட்ட விஷயத்தில் யாருடைய பெயரையும் இழுக்க விரும்பவில்லை. மீடியாக்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் இருந்து வந்த விமர்சனங்கள், சர்ச்சைகள், கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சருக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதற்கான காலம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஸ்பான்சருக்காக யாருக்கும் நெருக்கடி கொடுக்க முடியாது. ஸ்பான்சர் ஒப்பந்தம் பரஸ்பர சம்மதம் கொண்டதாக இருக்க வேண்டும். இந்திய அணியினரின் சீருடையில் ஸ்பான்சர் பெயர் இடம் பெறுவது குறித்தும் இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும்.


இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அல்லது போட்டி அமைப்பு குழுவிடம் இருந்து அப்படி எந்த தகவலும் வரவில்லை. ஆனாலும் இந்த விஷயத்தில் தெளிவான நிலையை தெரிவிக்குமாறு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தில் மற்ற பல நாடுகளை விட இந்தியா நல்ல நிலையில் தான் இருக்கிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் அங்கம் வகிப்பவர்களின் சீருடையில் இந்தியா என்று மட்டுமே பொறிக்கப்பட்டு இருக்கும் . எந்த ஸ்பான்சர் நிறுவனத்தின் பெயரும் இடம் பெறாது என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

செய்திகள்4 hours ago

அதிர்ச்சி! உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் கொரோனாவுக்கு பலி!

அரசியல்5 hours ago

வறண்டு கிடக்கும் கோயில் குளங்கள்! கவனிப்பாரா அறநிலையத்துறை அமைச்சர்!

தென்காசி6 hours ago

தென்காசி தொகுதியில் எஸ்.பழனி நாடார் வெற்றியை எதிர்த்து அதிமுகவின் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு

இந்தியா6 hours ago

தாஸ்மஹாலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: ஒரே நேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதி

அரசியல்7 hours ago

1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைப்பு பற்றி விசாரணைக்கு ஆணையிடுங்கள்! – டாக்டர் ராமதாஸ்

இந்தியா7 hours ago

ஜூலை 1-ந் தேதி எம்.பி.பி.எஸ். வகுப்பு தொடக்கம்

செய்திகள்7 hours ago

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்பு

குற்றம்8 hours ago

டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா கைது

இந்தியா8 hours ago

இந்தியாவில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

திருச்சிராப்பள்ளி8 hours ago

எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்! தெற்கு ரயில்வே!

அரசியல்2 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்1 month ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

அரசியல்2 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்2 months ago

சினிமா பிரபலங்களின் வாக்கு பதிவு புகைப்படங்கள்

அரசியல்2 months ago

தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

செய்திகள்3 months ago

தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

செய்திகள்3 months ago

இன்று (ஏப்ரல் 02) காலை நிலவரப்படி தங்கம் சவரன் 34 ஆயிரத்தை கடந்தது!..

செய்திகள்3 months ago

எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பகுதியாக ரத்து! தெற்கு ரயில்வே !

அரசியல்1 month ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

அரசியல்4 weeks ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

Trending