IPL 2021: சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. புள்ளி பட்டியலிலும் முதலிடம்

 
IPL 2021: சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. புள்ளி பட்டியலிலும் முதலிடம்

14-வது ஐபிஎல் சீசனின் 19-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரராக களம் இறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

இந்த ஜோடி 9.1 ஓவரில் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது ருத்துராஜ் கெய்க்வாட் 25 பந்தில் 33 ரன்கள் எடுத்திருந்த போது யுஸ்வேந்திர சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 18 பந்தில் 24 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்ஷல் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். டு பிளிஸ்சிஸ் 40 பந்தில் அரைசதம் அடித்து, ஹர்ஷல் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் சி.எஸ்.கே 13.5 ஓவரில் 111 ரன்கள் எடுத்திருந்தது.

ஜடேஜா டக்அவுட்டில் இருந்து தப்பித்தார், அதன்பின் அம்பதி ராயுடு 7 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஹர்ஷல் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார். 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்திருந்தது சி.எஸ்.கே.

கடைசி ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேலின் முதல் மூன்று பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பினார் ஜடேஜா. இதில் 3வது பந்து நோ-பால், அதற்குப்பதிலாக வீசிய பந்திலும் சிக்ஸ் அடித்துடன் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

ஐந்தாவது பந்தையும் சிக்சருக்கு விளாசிய ஜடேஜா. கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. கடைசி ஒவரில் ஜடேஜா 37 ரன்கள் விளாசினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஹர்சல் பட்டேல் 4 ஓவரில் 51 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 192 ரன்கள் வெற்றி இலக்காக கொன்டு களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி, தேவதூத் பாடிக்கல், 8 ரன் எடுத்திருந்த போது சாம் குர்ரன் வீசிய பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கோலி. 5தாவுது ஓவரில் முடிவில் ஷார்துல் தாக்கூர் வீசிய பந்தில் தேவதூத் பாடிக்கல் 15 பந்தில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் 7 ரன் எடுத்திருந்த போது ஜடேஜா வீசியப்பந்தில் அவுட்டானார்.

மேக்ஸ்வெல் 22 ரன் எடுத்திருந்த போது ஜடேஜா வீசியப்பந்தில் அவுட்டானார். கிறிஸ்டியன் 1 ரன்னுடனும், ஏபி டிவில்லியர்ஸ் 4 ரன்னுடனும் அடுத்து அடுத்து ஜடேஜாவிடம் அவுட்டானார்கள். இம்ரான் தாஹிர் வீசிய பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஹர்ஷல் படேல் அவுட்டானார். நவ்தீப் சைனி 2 ரன்னும், கைல் ஜேமீசன் 16 ரன்னும் எடுத்து அவுட்டானார்கள்.

யுஸ்வேந்திர சாஹல் 8 ரன்னும், முகமது சிராஜ் 12 ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் முதலிடம் பிடித்தது. பெங்களூரு அணியில் படிக்கல் அதிக பட்சமாக 34, மேக்ஸ்வெல் 22 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

From around the web