ISL Football: சென்னை அணி 1-0 என்ற கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தியது.

 
ISL Football: சென்னை அணி 1-0 என்ற கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தியது.

நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி, 3 முறை சாம்பியனான ஏ.டி.கே.மோகன் பகான், 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., பெங்களூரு, கோவா, கேரளா பிளாஸ்டர்ஸ், ஈஸ்ட் பெங்கால், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஒடிசா, ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் ஆகிய 11 அணிகள் கலந்து மோதவுள்ள 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.

ISL Football: சென்னை அணி 1-0 என்ற கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தியது.

இதில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், ஐதராபாத் எப்.சி அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் 66-வது நிமிடத்தில் சென்னை அணியின் விளாடிமிர் கோமர் கோல் அடிக்க, சென்னை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

ISL Football: சென்னை அணி 1-0 என்ற கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தியது.

ஐதராபாத் அணி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும், கடைசிவரை கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் சென்னை அணி 1-0 என்ற கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தியது. சென்னை அணி புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

From around the web