இன்று நடைபெற இருந்த 5 வது டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது

 
இன்று நடைபெற இருந்த 5 வது டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது

இந்திய – இங்கிலாந்துக்கு இடையே நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்ட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடைபெற இருந்தது.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், நிதின் படேல் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தி கொண்டனர்.

இன்று நடைபெற இருந்த 5 வது டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது நேற்று முன்தினம் மாலை உறுதியானது. இதனை தொடர்ந்து இந்திய வீரர்களுடன் நெருங்கி பணியாற்றியதால் அணியினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைப்படி இந்திய அணியினர் அனைவரும் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

இன்று நடைபெற இருந்த 5 வது டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது
I

இந்நிலையில் இந்திய அணியினருக்கு நடத்தப்பட்டு இருக்கும் கொரோனா பரிசோதனையின் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவுகள் வெளியானது. இருந்தாலும் 5 வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2:1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் தொடரை இந்தியா கைப்பற்றி உள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்துடனான ஆலோசனையை தொடர்ந்து, இன்று தொடங்க இருந்த 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

From around the web