பிரபல கால்பந்து ஜாம்பவான் காலமானார்

 
பிரபல கால்பந்து ஜாம்பவான் காலமானார்

ஜெர்மன் கால்பந்து ஜாம்பவானான ஜெர்ட் முல்லர் (வயது 75) இன்று காலமானார்.

ஜெர்மன் கால்பந்து ஜாம்பவான், முன்னாள் பேயர்ன் முனிச் வீரர் மற்றும் மேற்கு ஜெர்மனி உலகக் கோப்பை வென்ற ஜெர்ட் முல்லர் தனது 75 ஆவது வயதில் இன்று காலமானார். அவரது மறைவிற்கு ஜெர்மன் கால்பந்து ரசிகர்கள்,கால்பந்து நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பேயர்னுக்கான 607 ஆட்டங்களில் 566 கோல்களும், மேற்கு ஜெர்மனிக்கு 62 ஆட்டங்களில் 68 கோல்கள் அடித்துள்ளார். மேலும்
விளையாட்டு வரலாற்றில் மிகப் அதிக கோல் அடித்தவர்களில் இவரும் ஒருவர்.

From around the web