இன்று தொடங்குகிறது இந்தியா-இங்கிலாந்து பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

 
இன்று தொடங்குகிறது இந்தியா-இங்கிலாந்து பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய பெண்கள் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் அணி 2014-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு, அதாவது 7 ஆண்டுகளுக்கு பிறகு விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எப்படி செயல்பட போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுவரை 13 டெஸ்டில் போட்டிகளில் மோதியுள்ள இந்தியா-இங்கிலாந்து அணிகள், 2-ல் இ்ந்தியாவும், 1-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளது.

மேலும் இங்கிலாந்தில் இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி இந்திய அணி இதுவரை டெஸ்டில் தோற்றது கிடையாது. 2-ல் வெற்றியும், 6-ல் டிராவில் முடிந்துள்ளது.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

From around the web