Connect with us

செய்திகள்

14-வது ஐபிஎல் சீசனில் எஞ்சிய போட்டிகள் செப்டம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது

Published

on

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அமீரகத்தில் நடத்தப்பட்டது. தற்போது நடப்பாண்டிற்கான போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்டன. ஏப்ரல் 9ம் தேதி தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூர் நகரங்களில் போட்டிகளை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், ஐதராபாத் அணியில் விருத்திமான் சஹாவுக்கும், டெல்லி அணியில் அமித் மிஸ்ராவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் எல்.பாலாஜிக்கும், அணியின் பஸ் கிளீனருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கிரிக்கெட் வாரியமும், ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழுவும் முடிவு செய்து ஐ.பி.எல். போட்டியை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 14-வது ஐபிஎல் சீசனின் இந்தியாவில் 29 லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது. இந்திய அணிக்கு செப்டம்பர் 14ம் தேதி வரை டெஸ்ட் தொடர் உள்ளதாலும், அக்டோபர் கடைசியில் டி20 உலகக்கோப்பை தொடங்கிவிடும் என்பதாலும், செப்டம்பர் மாத பாதியில் தொடங்கி, அக்டோபர் பாதிக்குள் ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஐபிஎல் போட்டிகளை அமீரகத்தில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

துபாய், சார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய மூன்று இடங்களில் மொத்தம் 25 நாட்கள் ஐபிஎல் போட்டி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்திகள்3 hours ago

அதிர்ச்சி! உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் கொரோனாவுக்கு பலி!

அரசியல்5 hours ago

வறண்டு கிடக்கும் கோயில் குளங்கள்! கவனிப்பாரா அறநிலையத்துறை அமைச்சர்!

தென்காசி5 hours ago

தென்காசி தொகுதியில் எஸ்.பழனி நாடார் வெற்றியை எதிர்த்து அதிமுகவின் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு

இந்தியா6 hours ago

தாஸ்மஹாலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: ஒரே நேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதி

அரசியல்6 hours ago

1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைப்பு பற்றி விசாரணைக்கு ஆணையிடுங்கள்! – டாக்டர் ராமதாஸ்

இந்தியா7 hours ago

ஜூலை 1-ந் தேதி எம்.பி.பி.எஸ். வகுப்பு தொடக்கம்

செய்திகள்7 hours ago

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்பு

குற்றம்7 hours ago

டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா கைது

இந்தியா8 hours ago

இந்தியாவில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

திருச்சிராப்பள்ளி8 hours ago

எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்! தெற்கு ரயில்வே!

அரசியல்2 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்1 month ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

அரசியல்2 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்2 months ago

சினிமா பிரபலங்களின் வாக்கு பதிவு புகைப்படங்கள்

அரசியல்2 months ago

தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

செய்திகள்3 months ago

தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

செய்திகள்3 months ago

இன்று (ஏப்ரல் 02) காலை நிலவரப்படி தங்கம் சவரன் 34 ஆயிரத்தை கடந்தது!..

செய்திகள்3 months ago

எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பகுதியாக ரத்து! தெற்கு ரயில்வே !

அரசியல்1 month ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

அரசியல்4 weeks ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

Trending