ஐபிஎல் !எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்!

 
ஐபிஎல் !எஞ்சிய ஆட்டங்கள்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்!

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அமீரகத்தில் நடத்தப்பட்டது. தற்போது நடப்பாண்டிற்கான போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்டன. ஏப்ரல் 9ம் தேதி தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூர் நகரங்களில் போட்டிகளை நடத்தப்பட்டு வந்தது.

ஐபிஎல் !எஞ்சிய ஆட்டங்கள்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்!

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், ஐதராபாத் அணியில் விருத்திமான் சஹாவுக்கும், டெல்லி அணியில் அமித் மிஸ்ராவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் எல்.பாலாஜிக்கும், அணியின் பஸ் கிளீனருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கிரிக்கெட் வாரியமும், ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழுவும் முடிவு செய்து ஐ.பி.எல். போட்டியை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

ஐபிஎல் !எஞ்சிய ஆட்டங்கள்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்!

இந்நிலையில் 14-வது ஐபிஎல் சீசனின் இந்தியாவில் 29 லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது. இந்திய அணிக்கு செப்டம்பர் 14ம் தேதி வரை டெஸ்ட் தொடர் உள்ளதாலும், அக்டோபர் கடைசியில் டி20 உலகக்கோப்பை தொடங்கிவிடும் என்பதாலும், செப்டம்பர் மாத பாதியில் தொடங்கி, அக்டோபர் பாதிக்குள் ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

From around the web