டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு முன்னேற்றம்

 
டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடைபெறும் 32-வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹைன் ஜெர்மனியின் நடின் அபேட்ஸ்-ஐ எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் 28-29, 29-28, 30-27, 30-27, 27-30 என புள்ளிகள் பெற்று 3-2 என வெற்றி பெற்றார். இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் சீன தைஃபேயின் என்சி சென்-ஐ எதிர்கொள்கிறார். இந்த போட்டி 30-ந்தேதி நடைபெறுகிறது.

From around the web