டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 3-0 என ஸ்பெயினை வீழ்த்தியது

 
டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 3-0 என ஸ்பெயினை வீழ்த்தியது

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடைபெறும் 32-வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற 3-வது லீக் சுற்றில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கியதில் இருந்து இந்திய வீரர்கள் ஆக்ரோசமாக விளையாடி ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் முதல் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் ருபிந்தர்பால் சிங் கோல் அடித்தார். இதனால் முதல் கால்பகுதி ஆட்டத்தில் இந்தியா 2-0 என முதலிடம் முன்னிலை பெற்றது.

2-வது மற்றும் 3-வது காலிறுதி பகுதி ஆட்டங்களில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 4-வது காலிறுதி ஆட்டத்தில் ருபிந்தர் பால் சிங் (51) மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-0 என கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

இந்திய ஹாக்கி அணி இதுவரை 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

From around the web