டோக்கியோ ஒலிம்பிக்: காலிறுதியில் தென்கொரியாவிடம் தோல்வியை தழுவிய இந்திய ஆண்கள் அணி

 
டோக்கியோ ஒலிம்பிக்: காலிறுதியில் தென்கொரியாவிடம் தோல்வியை தழுவிய இந்திய ஆண்கள் அணி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடைபெறும் 32-வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், தருண் தீப்ராய் ஆகியோர் கஜகஸ்தான் அணியிருடன் மோதினர்.

டோக்கியோ ஒலிம்பிக்: காலிறுதியில் தென்கொரியாவிடம் தோல்வியை தழுவிய இந்திய ஆண்கள் அணி

இதில் முதல் 2 செட்டை இந்திய அணி வென்றது, மூன்றாவது செட்டை கஜகஸ்தான் வென்றது. நான்காவது மற்றும் கடைசி செட்டை இந்திய அணி கைப்பற்றியது. இதன்மூலம் இந்திய அணி 6- 2 என்ற கணக்கில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற காலிறுதியில் போட்டியில் இந்தியா பலம் வாய்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது. தென்கொரிய வீரர்களுக்கு இணையாக இந்திய வீரர்களால் அம்புகளை தொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 54-59, இரண்டாவது செட்டை 57-59, மூன்றாவது செட்டை 54-56 என இழந்து செட் பாயிண்டில் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

From around the web