டோக்கியோ ஒலிம்பிக்: இன்று (ஜூலை 28) இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள்

 
டோக்கியோ ஒலிம்பிக்: இன்று (ஜூலை 28) இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடைபெறும் 32-வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-

வில்வித்தை

ஆண்களுக்கான தனிநபர் வெளியேற்றுதல் சுற்று: தருண்தீப் ராய்-ஒலெக்சி ஹன்பின் (உக்ரைன்), காலை 7.31 மணி.

பிரவின் ஜாதவ்-கால்சன் பஜர்ஜபோவ் (ரஷியா), பகல் 12.30 மணி.

பெண்களுக்கான தனிநபர் வெளியேற்றுதல் சுற்று: தீபிகா குமாரி-கர்மா (பூடான்), பிற்பகல் 2.14 மணி.

பேட்மிண்டன்

பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றில் பி.வி.சிந்து-நான் யி செங் (ஹாங்காங்), காலை 7.30 மணி.

ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்றில் சாய் பிரனீத்-மார்க் கால்ஜோவ் (நெதர்லாந்து), பகல் 2.30 மணி.

ஆக்கி

இந்தியா-இங்கிலாந்து, பெண்கள் பிரிவு லீக் ஆட்டம், காலை 6.30 மணி.

குத்துச்சண்டை

பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று: பூஜா ராணி-இச்ராக் சாய்ப் (அல்ஜிரியா), பிற்பகல் 2.33 மணி.

துடுப்பு படகு

ஆண்கள் லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் அரைஇறுதி சுற்று: அர்ஜூன் லால் ஜாட்-அரவிந்த் சிங், காலை 8 மணி.

பாய்மர படகு

ஆண்களுக்கான ஸ்கிப் 49 இஆர் தகுதி சுற்று: கணபதி-வருண் தக்கர், காலை 8.35 மணி முதல்.

From around the web